< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
|23 Jun 2023 5:50 PM IST
பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் பலர் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று மதியம் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் வந்ததை அடுத்து, அவர்கள் உடனடியாக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே. பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சந்தித்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.