< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்

தினத்தந்தி
|
20 Feb 2023 11:28 PM IST

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்களை பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதிமுக ஓபிஎஸ் அணியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது. அரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்த பவுன்சர்கள், கட்சித் தொண்டர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள், பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கூட்டத்துக்கு வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நிர்வாகி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்