< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ. பன்னீர் செல்வம் பக்கம்தான்- ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர்
|24 Jun 2022 6:13 PM IST
அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ. பன்னீர் செல்வம் பக்கம் இருப்பதை நான் பார்க்கிறேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
சென்னை
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமி தான். செயல்திட்டத்தில் இல்லாததை பேச அனுமதித்ததே தவறு. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திட்டமிட்டே ஒற்றைத் தலைமை விவகாரம் விவாதமாக்கப்பட்டது. தொண்டர்கள் ஓ.பன்னீர்செலவம் பக்கமும், நிர்வாகிகள் பழனிசாமி பக்கமும் உள்ளனர்.
அ.தி.மு.க., பழனிசாமியின் சொத்தோ, பன்னீர்செல்வத்தின் சொத்தோ அல்ல, அது தொண்டர்களின் சொத்து!
அ.தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்தால் எடப்பாடி பழனிசாமி சி.வி சண்முகத்தை பின் தொடரலாம்.
அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதை நான் பார்க்கிறேன் என கூறினார்.