< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிரியாணிக்காக முட்டி மோதிய தொண்டர்கள்.. - சேலத்தில் பரபரப்பு
|29 Jan 2024 9:31 PM IST
பிரியாணி வாங்குவதற்காக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதியதால் உணவு விநியோகித்தவர் கோபமடைந்தார்.
சேலம்,
சேலத்தில் நடைபெற்ற அ.ம.மு.க. கூட்டத்தில் வெஜிடபிள் பிரியாணி வாங்க தொண்டர்கள் முட்டி மோதிய நிலையில் உணவு விநியோகித்தவர் கோபத்தில் தட்டைப் பிடுங்கி வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.
சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுக பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் மதிய உணவாக தொண்டர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.
அப்போது தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதி உணவு வாங்கினர். இதனால் உணவை விநியோகித்து வந்தவர், ஆத்திரம் அடைந்து ஒருவரின் தட்டை கோபமாக பிடுங்கி வீசினார். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.