< Back
மாநில செய்திகள்
பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி

தினத்தந்தி
|
25 March 2023 11:58 PM IST

பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி நடந்தது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த இந்த வாலிபால் போட்டியை வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தொடங்கி வைத்தார். இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்