< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் நாளை முதல் வாலிபால் போட்டிகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் நாளை முதல் வாலிபால் போட்டிகள்

தினத்தந்தி
|
29 Sept 2023 1:21 AM IST

பெரம்பலூரில் வாலிபால் போட்டிகள் நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் நடக்கிறது/

பெரம்பலூர் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் 9443438912 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு கட்டணம் கிடையாது. மதிய உணவு வழங்கப்படும். பங்கேற்கும் வீரர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். கிளப் அணியினர், அவரவர் கிளப்பிற்கு மட்டுமே விளையாட வேண்டும். பள்ளி-கல்லூரி அணியினர் கல்வி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். வெற்றி பெறும் அணியினர் மண்டல அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர், என்று வாலிபால் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்