தர்மபுரி
பாலக்கோட்டில்மாநில கைப்பந்து போட்டிமேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார்
|பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடக்கிறது. பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் பாலக்கோடு நண்பர்கள் கைப்பந்து அணி, திருச்சி போலீஸ் அணி, கோவை, சேலம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி போலீஸ் அணி, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
தொடக்க விழாவில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், சூளகிரி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு மனோகரன், பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து, இன்ஸ்பெக்டர் தவமணி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மூத்த வக்கீல் சந்திரசேகர், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி ரவி, மாவட்ட பிரதநிதி செந்தில், மோகன், பெரியசாமி, ஜெயந்திமோகன், சக்திவேல், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், குமார், பேரூராட்சி துணைத்தலைவர் இதயத்துல்லா, சக்திவேல், ராஜபார்ட் ரங்கதுரை, பேரூர் அவைத்தலைவர் அமானுல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.