< Back
மாநில செய்திகள்
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்காலை உணவு திட்டம்: கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்காலை உணவு திட்டம்: கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

தினத்தந்தி
|
12 Sept 2023 12:15 AM IST

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நேற்று இந்த பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நெரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறையாக காலை உணவு வழங்கப்படுகிறது? சமையலுக்கு தேவையான பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளாத? என்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி சமையலரிடம் கேட்டறிந்தார். பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று அவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர் மாணவ, மாணவியருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தாசில்தார் ராமகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்