< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் வரும் ரெயில்களுக்கு விவேகானந்தர், கலாம் பெயர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் வரும் ரெயில்களுக்கு விவேகானந்தர், கலாம் பெயர்கள்

தினத்தந்தி
|
10 Sept 2023 12:10 AM IST

ராமேசுவரம் வரும் ரெயில்களுக்கு விவேகானந்தர், கலாம் பெயர்களை சூட்ட வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தி உள்ளது.

ராமேசுவரம் வரும் ரெயில்களுக்கு விவேகானந்தர், கலாம் பெயர்களை சூட்ட வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பயணிகள் குழப்பம்

ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், மத்திய ரெயில்வே அமைச்சகம் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரம்-சென்னை எழும்பூர் இடையே தற்போது இயக்கப்படும் 2 விரைவு ரெயில்களுக்கும் பெயரிடப்படாமல் ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுகிறது. புறப்படும் நேரம், சேரும் நேரத்தை வைத்து எந்த ரெயில் என்று அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் பயண டிக்கெட் பதிவின் போது பெரும் குழப்பத்துக்கு ஆளாகின்றனர். இது சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

பெயர் சூட்ட வேண்டும்

மற்ற பல்வேறு ெரயில்களுக்கு பொதிகை, சிலம்பு, திருவள்ளுவர், பாண்டியன், பல்லவன், சோழன், முத்துநகர், வைகை, புளூ மவுண்டன், ராக்போர்ட், கிராண்ட் ட்ரங்க், தமிழ்நாடு, டெக்கான் குயின் என்று பெயர் சூட்டி உள்ள நிலையில் ராமேசுவரம் வழித்தடத்தில் ஓடும் ெரயில்களுக்கு மட்டும் பெயரிடாமல் உள்ளதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. எனவே, பொதுமக்களின் வசதி கருதி மேற்கண்ட 2 ெரயில்களுக்கும் அப்துல் கலாம் எக்ஸ்பிரஸ் மற்றும் சுவாமி விவேகானந்தர் எக்ஸ்பிரஸ் என்று பெயரிட ெரயில்வே நிர்வாகத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்