< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் தடை
|7 Jan 2024 11:33 PM IST
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வருகிற 9ந்தேதி முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.