< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை
|27 April 2024 10:36 PM IST
கொடைக்கானலுக்கு தமிழக முதல்-அமைச்சர் நாளை மறுநாள் வருகை தருவதையொட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திண்டுக்கல்,
தமிழக முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் நாளை மறுநாள் கொடைக்கானல் நகருக்கு செல்ல உள்ளார். இதற்காக மதுரை வரை விமானத்தில் செல்லும் அவர், கார் மூலம் வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் நகருக்கு சென்று பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்க உள்ளார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் மலைப்பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஏப்.29 முதல் மே 4-ஆம் தேதிவரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொடைக்கானல் பகுதிகளில் டிரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.