< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாஜக பேனர் மீது விசிக கொடி - பழனியில் பதற்றம்
|17 Sept 2022 4:36 PM IST
பழனியில் பாஜகவினர் வைத்த பேனர் மீது விசிகவினர் கொடியைக் கட்டியதால் பதற்றம் ஏற்பட்டது.
பழனி,
பழனியில் பாஜகவினர் வைத்த பேனர் மீது விசிகவினர் கொடியைக் கட்டியதால் பதற்றம் ஏற்பட்டது. ரெயில்வே பீடர் சாலையில், பிரதமர் மோடியை வாழ்த்தி பாஜகவினர் வைத்த பேனர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கட்சிக் கொடியைக் கட்டினர்.
இதையடுத்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த கொடியை அகற்றுமாறு கூறியபோது, அவர்களுடன் விசிகவினர் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசாரே அந்தக் கொடியை அகற்றினர்.
தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், பாஜகவினர் தங்கள் பேனரை வேறு இடத்தில் மாற்ற சம்மதித்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் தணிந்தது.