< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
|13 July 2022 12:47 AM IST
முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதுடெல்லி,
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக முன் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அடுத்த விசாரணை வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நிதிபதி வழக்கை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.