< Back
மாநில செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் விருதுநகர் பெண் - வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
மாநில செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் விருதுநகர் பெண் - வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

தினத்தந்தி
|
18 May 2023 2:08 AM IST

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்ற பெற தமிழக வீராங்கனை முத்தமிழ்செல்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்விக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

"எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி அவர்கள்.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7,200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன். எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்