< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகர்: பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது வேன் மோதல் - 11 பேர் படுகாயம்
|29 Aug 2022 3:42 PM IST
ஆவுடையாபுரம் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் பள்ளி மாணவர்கள் ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது. சாலையின் எதிர் திசையில் வேகமாக வந்த வேன், எதிர்பாராத விதமாக பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் படுகாயம் அடைந்தனர். மாணவர்களில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், ஆட்டோவில் சிக்கியிருந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மாணவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.