விருதுநகர்
சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
|சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுவோம் என கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கவர்னர் உரையிலும் தெரிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின் படி பொதுமக்கள் தரும் விண்ணப்பங்கள் மீது குறிப்பிட்ட கால அவகாசத்தில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. விதிக்கப்படும் அபராதம் மனுதாரர்களுக்கு வழங்கப்படவும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் இந்த சட்டத்தை வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.