< Back
மாநில செய்திகள்
விருதுநகர் எம்.பி. தொகுதியில் துரைவைகோ போட்டியிட வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகர் எம்.பி. தொகுதியில் துரைவைகோ போட்டியிட வேண்டும்

தினத்தந்தி
|
10 Oct 2023 1:37 AM IST

விருதுநகர் எம்.பி. தொகுதியில் துரைவைகோ போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ம.தி.மு.க. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி குழு அமைத்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமை தாங்கினார். விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் கம்மாபட்டி ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, அரசியல் ஆலோசனை குழு செயலாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பூமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான படிவங்களை ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு வழங்கினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்பது உள்பட 6 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்