விருதுநகர்
விருதுநகர் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்
|வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.
வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
விருதுநகரில் தனியார் அரங்கில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் ஸ்ரீ ராஜா சொக்கர், ரங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணனசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், நகர தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரசிற்கு மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேர்தல் பணிக்காக 10 பேர் கொண்ட பூத்கமிட்டிகள் அமைக்க வேண்டும்.
வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் படந்தால் விலக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி
மாவட்டத்தில் அனைத்து வேளாண் விற்பனை கூடங்களிலும் தேசிய வேளாண் சந்தை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரில் அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரியினை தொடங்க வேண்டும்.
தோப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணியை விரைவில் தொடங்க வேண்டும். பட்டம்புதூர் அருகே ஜவுளி பூங்கா விரைவில் தொடங்க வேண்டும். ஆனைகுட்டம் அணை ஷட்டரை ரூ.49 கோடியில் சீரமைக்க வேண்டும். முன்னாள் சென்னை மாகாண முதல்-மந்திரி பி.எஸ்.குமாரசாமி ராஜா திரு உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.