< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகர்: சாலையோர பனை மரத்தில் கார் மோதி விபத்து - டிரைவர் பலி
|1 July 2022 8:06 PM IST
விருதுநகர் அருகே சாலையோர பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.
பனைக்குளம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் உறவினர்கள் 10 பேருடன் கார் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு வந்துள்ளார். இந்த காரை விருதுநகர் சொக்கநாதர்புதூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தவிட்டுகனி(வயது 32) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்த கார் இன்று அதிகாலையில் உச்சிப்புளி ரெயில்வே கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் டிரைவர் தவிட்டுக்கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் இருந்த மற்ற அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உச்சிப்புள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.