< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களுக்கு திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகளே அடிப்படை - ஐகோர்ட்டில் மனுதாக்கல்
|19 May 2022 9:53 PM IST
திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளின் போது, ஆயுதங்கள், இரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் வரும்போது, ஆயுதங்கள், இரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள பொதுநல மனுவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகள் அடிப்படையாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் வரும்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டவை, இரத்தமல்ல வண்ணப்பொடி என்ற வாசகங்கள் இடம்பெற உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.