கன்னியாகுமரி
நாகர்கோவிலில் போக்குவரத்து விதி மீறல்:கடந்த 10 நாட்களில் ரூ.10½ லட்சம் அபராதம்
|நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 10 நாட்களில் ரூ.10½ லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 10 நாட்களில் ரூ.10½ லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்
தமிழ்நாட்டில் மோட்டார் வாகன புதிய சட்டத்திருத்தத்தின் படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்ட முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாத வாகனவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
அந்த வகையில் நாகர்கோவில் மாநகர பகுதியில் மட்டும் கடந்த 10 நாட்களில் 1,404 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.10 லட்சத்து 52 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நேற்று மாநகர பகுதிகளில் உள்ள ஒருவழிப்பாதையில் வாகனத்தை ஓட்டி வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
----