< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து விதிமுறை மீறல்: சென்னையில் நேற்று ஒரேநாளில் 2,500 வழக்குகள் பதிவு
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறல்: சென்னையில் நேற்று ஒரேநாளில் 2,500 வழக்குகள் பதிவு

தினத்தந்தி
|
27 Oct 2022 3:47 PM IST

போக்குவரத்து விதிமுறை மீறில் சென்னையில் நேற்று ஒரேநாளில் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த அபராதத் தொகைகளை உயர்த்தி புதிய அரசாணை தமிழக அரசு வெளியிட்டது. இந்த புதிய அரசாணை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.15.5 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்