< Back
மாநில செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு;5 பேர் மீது வழக்கு
மதுரை
மாநில செய்திகள்

கொட்டாம்பட்டி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு;5 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
15 July 2023 1:00 AM IST

கொட்டாம்பட்டி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதில் 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள காடம்பட்டியில் தொட்டிச்சி அம்மன் சோனையன் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நேற்று முன்தினம் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது. இதனை தொடர்ந்து கொட்டாம்பட்டி போலீசார் காடம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது 55), கண்ணன் (52), வெள்ளைச்சாமி (49), ஜெயராமன் (43), கிருஷ்ணன் (60) உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்