< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் - நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு
|7 Aug 2024 6:05 AM IST
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து 12 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்டக் கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் விதியை மீறி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விதிகளை மீறி 1,800-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரைபட அனுமதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அதில் விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை கோர்ட்டு ஒத்திவைத்தது.