< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அருகே வினோதம்: குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே வினோதம்: குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி

தினத்தந்தி
|
28 Feb 2023 1:12 PM IST

குடிப்பழக்கத்தை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று இளநீர் வியாபாரி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய ருசிகர சம்பவம் நடந்து இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். அவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகி்றார்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்ததும், அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே அழித்தார். இந்த நிலையில் கடந்த வருடம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவலைப்பட்ட மனோகரன் குடியை நிறுத்த முடிவு எடுத்தார்.

மனோகரன் டைரி ஒன்றை எடுத்து அதில் தான் இறுதியாக குடித்த நாளை குறித்து வைத்துள்ளார். தொடர்ச்சியாக குடிக்காமல் சுமார் ஒரு வருட காலம் வரை இருந்து வந்துள்ளார். அவ்வப்போது மது குடிக்கும் எண்ணம் தோன்றினால் டீ குடிப்பது, விரும்பிய உணவை சாப்பிடுவது உள்ளிட்டவற்றை செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.

தான் திருந்தியது போல் அனைவரும் மதுப்பழக்கத்தில் இருந்து திருந்த வேண்டும் என்கிற நோக்கத்தில் குடியை மறந்து முதலாம் ஆண்டு தினம் என போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி இருக்கிறார்.

அவரது இந்த செயல் அந்த பகுதியில் மட்டும் அல்லாது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்