< Back
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி: தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழைத்தார், வாழை இலைகளின் விலை கிடுகிடு உயர்வு
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழைத்தார், வாழை இலைகளின் விலை கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
6 Sept 2024 12:27 PM IST

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சுபமுகூர்த்த தினம் மற்றும் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழைத்தார், வாழை இலைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 200 இலை கொண்ட ஒரு கட்டு கடந்த வாரம் ரூ.800-க்கு விற்பனை ஆன நிலையில் தற்போது ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய இலைக்கட்டு ரூ.6,500 வரை விற்பனையாகிறது. பூவன்வாழை தார், ரஸ்தாளி, நாட்டு வாழை, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைத்தார்கள் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை, முல்லை ரூ.400-க்கும், பிச்சிப்பூ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்