நாகப்பட்டினம்
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
|வேதாரண்யத்தில் 5 அடி முதல் 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வேதாரண்யத்தில் 5 அடி முதல் 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் கோவில்கள் திறக்கப்பட்டு திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
அந்தவகையில் வருகிற 31-ந் தேதி(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆங்காங்கே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சிலைகள் தயாரிக்கும் பணிகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும். பின்னர் அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடல், ஆறு, ஏரிகளில் கரைக்கப்படும்.
இதற்காக வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம், செம்போடை, தேத்தாகுடி, பிராந்தியங்கரை பகுதிகளில் 5 அடியிலிருந்து 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாசு ஏற்படாத வகையில்...
வேதாரண்யம் பகுதியில் தயாரிக்கபடும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தயாரிக்கப்படுவது சிறப்பம்சமாகும். இந்த சிலைகள் வெளியிடங்களுக்கும் அனுப்பப்பட உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான இடங்களில் சிலைகள் வைப்பதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக அதிகளவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. அதற்கான பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.