< Back
மாநில செய்திகள்
தடையை மீறி கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு - சென்னையில் பரபரப்பு
மாநில செய்திகள்

தடையை மீறி கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு - சென்னையில் பரபரப்பு

தினத்தந்தி
|
4 Sept 2022 9:58 PM IST

சென்னை தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 2,554 சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாநகரம் முழுவதும் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னையில் பட்டினப்பாக்கம் உட்பட நான்கு இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை, திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சந்திப்பில் தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கு அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்