விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!
|புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் அதிகாலையிலேயே அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.
பிள்ளையார்பட்டி ,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், பிரபலமான விநாயகர் கோவில்களிலும் தரிசனம் செய்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே பிள்ளையார் சிலைகள் வைத்தும் வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் அதிகாலையிலேயே அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
அத்துடன், புகழ்பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.