< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
|10 Sept 2023 2:23 AM IST
கணபதி அக்ரகாரம் மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரகாரம் கிராமத்தில் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகாகணபதி கோவில் உள்ளது. இக் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விக்னேஷ்வர பூஜையும், அதனை தொடர்ந்து மேள தாளங்கள், வாணவெடிகள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து மகாகணபதிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடக்கிறது. வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், 18-ந் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவும் நடக்கிறது. 20-ந் தேதி (புதன்கிழமை) கண்ணாடி பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.