< Back
மாநில செய்திகள்
வில்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வில்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
26 May 2023 12:15 AM IST

சாயல்குடி அருகே வில்வநாதர் ேகாவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாயல்குடி,

சாயல்குடி அருகே வில்வநாதர் ேகாவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வில்வநாதர் கோவில்

சாயல்குடி அருகே மறவர் கரிசல்குளம் கிராமத்தில் வில்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், அரியநாச்சி அம்மன், சுப்பிரமணியர், தவசி தம்பிரான், தவமுனி மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைெயாட்டி கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு மதுரை ஆதீனம் சுந்தரமூர்த்தி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர் சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பேரூர் ஆதீனம் ஸ்ரீசாந்தலிங்க மருதாசல அடிகளார், சிந்தலக்கரை காளி பராசக்தி சித்தர் பீடம் ராமமூர்த்தி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மகா கும்பாபிஷேகம்

கடந்த 3 நாட்களாக சுவாமிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், முதற்கால யாக சாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

பின்னர் யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து செல்லப்பட்டு மூலஸ்தான கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாய என உச்சரித்து வழிபட்டனர். பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அதன்பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை சத்தியேந்திரன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மறவர் கரிசல்குளம் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்