< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்: இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்
மாநில செய்திகள்

விழுப்புரம்: இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்

தினத்தந்தி
|
12 March 2023 10:16 PM IST

ஆமைகள், பைக், மற்றும் இளைஞர்கள் இருவரையும் திண்டிவனம் வனசர அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

விழுப்புரம்,

கீழ்புத்துப்பட்டு சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கடலூரைச் சேர்ந்த கார்த்திக், நாகையன் ஆகிய 2 இளைஞர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் சாக்குப்பையில் 46 அரிய வகை ஆமைகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

இவ்விருவரும் கழிவுநீர் ஊர்தியில் வேலை பார்க்கும் நிலையில், கழிவு நீர் ஓடைகளில் செல்லும் ஆமைகளை பிடித்துச் செல்லத் திட்டமிட்டு 46 அரிய வகை ஆமைகளை சாக்குப்பையில் போட்டு பைக்கில் கடத்தி வந்த போது பிடிபட்டனர்.

ஆமைகள், பைக், மற்றும் இளைஞர்கள் இருவரையும் திண்டிவனம் வனசர அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அவ்விருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்