< Back
மாநில செய்திகள்
நடுவழியில் நின்ற விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில்
கடலூர்
மாநில செய்திகள்

நடுவழியில் நின்ற விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில்

தினத்தந்தி
|
13 July 2022 1:37 AM IST

என்ஜீனில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் கடலூர் அருகே நடுவழியில் நின்றது.

புவனகிரி,

விழுப்புரத்தில் இருந்து நேற்று காலை பயணிகள் ரெயில் புறப்பட்டு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் காலை 7 மணி அளவில் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட முயன்றபோது திடீரென என்ஜீனில் கோளாறு ஏற்பட்டு அங்கேயே நின்றது.

இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அன்றாட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.

மாற்று என்ஜீன்

பின்னர் மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்து மாற்று என்ஜீன் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். ஆனால் கரிகுப்பம் அனல் மில் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றி வரும் ரெயில் என்ஜின் அங்கு வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து பழுதாகி நின்ற என்ஜீனை அகற்றிவிட்டு மாற்று என்ஜீன் பொருத்தப்பட்ட பின்னர் சுமார் 50 நிமிடம் தாமதத்துக்கு பிறகு பயணிகள் ரெயில் அங்கிருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது. என்ஜீனில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் நடுவழியில் நின்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்