< Back
மாநில செய்திகள்
அதிகாரியிடம் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த கிராம மக்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

அதிகாரியிடம் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த கிராம மக்கள்

தினத்தந்தி
|
13 May 2023 11:58 PM IST

அதிகாரியிடம் ரேஷன் கார்டுகளை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

ஜெயங்கொண்டம்:

பொது இடத்தில் ரேஷன் கடை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருVillagers who handed over their ration cards to the officerகே உதயநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடாலி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் உள்ள பகுதியில் இருந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடத்தில் ரேஷன் கடையை கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் ரேஷன் கார்டுகளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். அப்போது, பொதுவான இடத்தில் ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தனர்

இந்நிலையில் ஏற்கனவே இருந்த இடத்திலேயே ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ேமலும் சுமார் 247 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை ஜெயங்கொண்டம் தனித்துணை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கோடாலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேஷன் கடை கட்ட வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் மனு அளித்து, போராடி வருகிறோம். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளனர்.

கோரிக்கை

அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில், அனைத்து சமூக மக்களும் ரேஷன் பொருட்களை எளிதில் வாங்கிச்செல்லும் வகையில் மாரியம்மன் கோவில் அருகே அரசுக்கு சொந்தமான பொதுவான இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்.

எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், குறிப்பாக முதியவர்களின் துயர் துடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வழக்கு

இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கோடாலி கிராம அலுவலர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த கிராம நிர்வாக அலுவலர் அழைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்