தஞ்சாவூர்
கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்த கிராம மக்கள்
|மகளிர் உரிமை தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருந்தனர்.
தகுதியான மகளிர்க்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து விடுபட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யப்படும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு கிராம மக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தஞ்கையை அடுத்த சின்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் தஞ்சை கலெக்டர்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படாத நிலையில் கட்டுகளாக கட்டப்பட்டு இருந்தது. தற்போது அந்த விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றதா என்ற நிலையில் தங்களுக்கு உரிமை தொகை வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.