< Back
மாநில செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள்  மறியல்
கரூர்
மாநில செய்திகள்

அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மறியல்

தினத்தந்தி
|
18 Oct 2023 10:53 PM IST

கரூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

கரூர் கிழக்கு ஒன்றியம், சோமூர் ஊராட்சி, முத்தமிழ்புரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு சாக்கடை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லையாம். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அரசு தமிழ்மணி தலைமையில் நேற்று முத்தமிழ்புரத்தில் உள்ள சோமூர்-கல்லுப்பாளையம் சாலையில் அமர்ந்து அடிப்படை வசதிகள் கேட்டும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 42 பேரையும் போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்று வாங்கலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்