< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்
|28 Aug 2022 10:27 PM IST
ஓசூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓசூர்
ஓசூர் அருகே நாகொண்டபள்ளி கிராமத்தின் வழியாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் மத்திகிரி போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை சீரமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.