< Back
தமிழக செய்திகள்

திண்டுக்கல்
தமிழக செய்திகள்
வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

22 Oct 2022 12:15 AM IST
வத்தலக்குண்டு அருகே மின்வாரியத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு அருகே குன்னத்துப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு கடந்த ஒரு ஆண்டாக மின் இணைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மின்வாரியத்தை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டினர். இந்நிலையில் நேற்று பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.