அரியலூர்
தேவாலயத்திற்கு சொந்தமான கொடி மரத்தை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
|திருமானூர் அருகே தேவாலயத்திற்கு சொந்தமான கொடி மரத்தை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள செம்பியக்குடி கிராமத்தில் புனித கித்தேரியம்மாள் கிறிஸ்தவ தேவாலயத்தின் கொடிமரம் சாலையோரத்தில் உள்ளது. அந்த கொடி மரத்தை அகற்றக்கோரி அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். இதனிடையே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று கொடி மரம் உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, சாலையோரத்தில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கொடி மரம் உள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லை. சாலை விரிவாக்கம் செய்யப்படும் போது அந்த கொடிகம்பத்தை கிராம மக்களே சேர்ந்து அகற்றிக்கொள்கிறோம் என தெரிவித்தனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது.