< Back
மாநில செய்திகள்
செஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

செஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

செஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி,

திண்டிவனம்-கிருஷ்ணகிரி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஏரியில் இருந்து மண் லோடு ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிக அளவில் செல்கிறது. இவ்வாறு செல்லும் லாரிகள் பள்ளி விடும் நேரங்களில் அதிவேகமாக செல்வதால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளி நேரத்தில் லாரிகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று மாலை மணல்லோடு ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்