< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
|17 July 2023 1:52 AM IST
திருப்பரங்குன்றம் அருகே மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு ஆதி திராவிட காலனி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் கடை திறப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் திறப்பதற்காக தயார்படுத்தப்பட்ட கடை முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அங்கு சென்று விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.