< Back
மாநில செய்திகள்
சூனாம்பேடு அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சூனாம்பேடு அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்

தினத்தந்தி
|
28 April 2023 2:51 PM IST

சூனாம்பேடு அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்போன் கோபுரம் அமைக்கும் பணி

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த வன்னியநல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளின் மத்தியில் 5 ஜி செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது.

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் பாதிப்பு ஏற்படும், என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்படவில்லை.

மறியல் போராட்டம்

விரக்தி அடைந்த கிராம மக்கள் நேற்று காலை 7 மணி அளவில் சூனாம்பேடு தொழுப்பேடு முக்கிய சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அத்தியாவசிய பொருளான பால் வாகனங்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூனாம்பேடு போலீசார் வருவாய்த்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி செல்போன் கோபுர கட்டுமானப் பணிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்