< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
|28 July 2022 12:49 AM IST
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பாளையங்கோட்டை அருகே அரியகுளம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், தெற்கு அரியகுளம் பாலகிருஷ்ணன் தலைமையில், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தங்களது ஊருக்கு பாத்தியப்பட்ட கோவிலை தனிக்குடும்பத்தினர் கொடை நடத்துவதை அனுமதிக்க கூடாது, ஆடி மாத கோவில் கொடையை ஊர் மக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு கொடுத்து சென்றனர்.