< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தலைமை ஆசிரியருடன் கிராம மக்கள் வாக்குவாதம்
|8 Aug 2023 1:30 AM IST
வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் தலைமை ஆசிரியரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடபட்டனர்
வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், பள்ளி நிர்வாக குழு கூட்டம் கடந்த 4-ந்தேதி நடந்தது. அப்போது இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் தன்னார்வலரை ஆசிரியர் ஒருவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் இதுதொடர்பாக தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். சிறிதுநேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் பூத்தாம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.