< Back
மாநில செய்திகள்
ரூ.50 கோடியில் கிராமப்புற சாலைகள் அமைக்கும் பணி; கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் தகவல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ரூ.50 கோடியில் கிராமப்புற சாலைகள் அமைக்கும் பணி; கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் தகவல்

தினத்தந்தி
|
2 Jan 2023 8:30 PM GMT

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்பில் கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கும் பணி நடப்பதாக கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்பில் கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கும் பணி நடப்பதாக கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.

கூடுதல் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராம இணைப்பு சாலை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி ரெட்டியார்சத்திரம், நத்தம், சாணார்பட்டி, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பணிகளை கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கே.புதுக்கோட்டை முதல் சுள்ளெரும்பு, கன்னடம்பட்டி ஜி.நடுப்பட்டி வரை ரூ.3.77 கோடியிலும், தோப்புபட்டி முதல் அய்யனம்பட்டி, குமாரபாளையம் வரை ரூ.1.75 கோடியிலும் தார்சாலை பணி நடக்கிறது.

இதுதவிர ஆத்தூர் ஒன்றியம் தேவரப்பன்பட்டியில் ரூ.2.53 கோடியிலும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சியில் தோப்புபட்டி முதல் அப்பனம்பட்டி வரை ரூ 1.76 கோடியிலும், நத்தம் ஒன்றியம் செந்துறை முதல் களத்துப்பட்டி வரை ரூ.4.74 கோடியிலும், குடகிபட்டி முதல் கருத்தநாயக்கன்பட்டி வரை ரூ.1.43 கோடியிலும், செல்லப்பநாயக்கன்பட்டி முதல் போயம்பட்டி வரை ரூ.2.12 கோடியிலும் தார் சாலை அமைக்கப்படுகிறது.

கிராம சாலைகள்

சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை முதல் அம்மாபட்டி வரை ரூ.2.97 கோடியிலும், கோபால்பட்டி முதல் கோரசின்னம்பட்டி வரை ரூ 3.27 கோடியிலும், நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு முதல் புள்ளிமான்கோம்பை வரை ரூ.8.27 கோடியிலும், குல்லலக்குண்டு ஊராட்சியில் பள்ளப்பட்டி முதல் கன்னிமாநகர் வரை ரூ.1.52 கோடியிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் புஷ்பத்தூர் வயலூர் முதல் மயிலாப்புரம் வரை ரூ.1.18 கோடியிலும், ஒட்டன்சத்திரம் தாலுகா தொப்பம்பட்டி தலையூத்து முதல் கீரனூர் வரை ரூ.2.40 கோடியிலும், தலையூத்து முதல் சந்தசெட்டி வலசு வரை ரூ.1.84 கோடியிலும், பழனி தாலுகா கூக்கால் மெயின்ரோடு முதல் குண்டாரம்பட்டி ரோடு வரை ரூ.8.09 கோடியிலும் சாலை பணி நடக்கிறது.

குஜிலியம்பாறை தாலுகாவில் ஆர்.புதுக்கோட்டை டி.கே.ரோடு முதல் ஜி.இ.ரோடு வரை ரூ.1.87 கோடியிலும், ஆர்.கோம்பை டி.கே.ரோடு முதல் புங்கம்பாடி வரை ரூ 1.19 கோடியிலும், உல்லியக்கோட்டை ஜி.எஸ்.ரோடு முதல் உல்லியக்கோட்டை ஏ.டிகாலனி வரை ரூ 1.77 கோடியிலும் என மாவட்டம் முழுவதும் ரூ.50.70 கோடியில் 83 கி.மீ தூரத்துக்கு கிராமப்புற சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்