< Back
மாநில செய்திகள்
589 ஊராட்சிகளில் சுதந்திரதின சிறப்பு கிராமசபை கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

589 ஊராட்சிகளில் சுதந்திரதின சிறப்பு கிராமசபை கூட்டம்

தினத்தந்தி
|
16 Aug 2023 2:40 AM IST

தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நடந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சியிலும் கலெக்டர் கலந்துகொண்டார்.

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நடந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சியிலும் கலெக்டர் கலந்துகொண்டார்.

சிறப்பு கிராம சபை கூட்டம்

தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா வீரமரசன்பேட்டை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.அந்த வகையில் வீரமரசன்பேட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல். தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பொதுமக்களிடையே கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.

கதிர் அடிக்கும் எந்திரம்

அதனைத் தொடர்ந்து கலெக்டர் தீபக்ஜேக்கப் பூதலூர் ஊராட்சி மற்றும் ஆவாரம்பட்டியில் விவசாயிகள் ராமசாமி, சக்திவேல் ஆகியோரின் நிலத்தினை பார்வையிட்டு நெல் உற்பத்தி மற்றும் அதன் கால அளவு கதிர் அடிக்கும் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன்செல்லக்கண்ணு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சங்கர், தாசில்தார் பெர்ஷியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சமபந்தி நிகழ்ச்சி

பின்னர் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடந்த சமபந்தி நிகழ்ச்சியிலும் கலெக்டர் தீபக்ஜேக்கப் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபான்ஸ்லே, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்