தஞ்சாவூர்
சிறப்பு கிராமசபை கூட்டம்
|வடக்குமாங்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
மெலட்டூர்;
வடக்குமாங்குடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட சமூக தணிக்கையை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார வள அலுவலர் பிரேமானந்த் தலைமை தாங்கினார். பணிமேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சி துணை தலைவர் அப்துல்நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கார்த்திக் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வடக்குமாங்குடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணிகள் குறித்து சமூக தணிக்கை குழுவினர் ஆய்வு அறிக்கை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வாசித்து காட்டப்பட்டது. கூட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் அம்பேத் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி தலைவர் கலைச்செல்விகனகராஜ் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து பேசி நன்றி கூறினார்.