கரூர்
கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
|கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செந்தாமலர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 5 ஆண்டுகள் பணி முடித்த கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஜி-2வும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஜி-1 என பதவி உயர்வும் அதற்கான பண பலனும் வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட வேண்டும். இலவச குடியிருப்பு மற்றும் இலவச மின்சாரம் ஆகியவை கிராம சுகாதார செவிலியர்களுக்கு வழங்கிட வேண்டும். பதிவேடுகளை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் நிர்ணயம் செய்ய வேண்டும். முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து பயனாளிகளுக்கு பணம் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.