< Back
மாநில செய்திகள்
திருமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சேலம்
மாநில செய்திகள்

திருமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2022 1:45 AM IST

திருமலை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

சூரமங்கலம்:-

சேலம் திருமலைகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் த.மாணிக்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கர்ணன் 2022-2023-ம் ஆண்டின் வரவு, செலவுகள் குறித்த விவரத்தை படித்து காண்பித்தார். ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் நடைபெற இருக்கும் பணிகள் கூட்ட ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதனை பெற்று கொண்ட ஊராட்சி தலைவர் மாணிக்கம், மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்