விருதுநகர்
நாராயணபுரத்தில் கிராம சபை கூட்டம்
|நாராயணபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நாரணாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தேவர்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளிமச்சக்காளை, துணைத்தலைவர் ராஜேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் கருப்பசாமி செய்திருந்தார். அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் கவிதா பாண்டிய ராஜ், துணைத்தலைவர் புஷ்பவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் ஈஸ்வரன், துணைத்தலைவர் தங்க பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சிசுந்தரி, பஞ்சாயத்து செயலாளர் லட்சுமணபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். சாமிநத்தம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு மகாலட்சுமி பாலகுருசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகேஸ்வரி சேதுராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் செந்தில்வேல் செய்திருந்தார். கிராமசபை கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.